மார்க் ஆண்டனி படத்தில் தளபதி விஜய்.? அப்டேட் கொடுத்து அதிர வைத்த விஷால்.!!

ThalapathyVijayforMarkAntony

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ் ஜே சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,  படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகர் விஷால் டிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்  மார்க் ஆண்டனி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் விஜய் “மார்க் ஆண்டனி ”  படத்தில் நடிக்கிறாரா..? என கேள்வி எழுப்பு வருகின்றனர்.

ஆனால் “மார்க் ஆண்டனி ” படத்தின்  டீசர் விஜய் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . ஏனென்றால் , விஜய் மற்றும் விஷால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் சிறிய வயதிலிருந்து விஷால் விஜயின் தீவிர ரசிகர் என்று கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் அவர் படத்தின் டீசரை வெளியிட்டால் படம் நல்ல விளம்பரம் ஆகும் என்பதற்காக விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

டீசரை வெளியீட விஜய்யும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான்  விஷால் டிவிட்டரில் #ThalapathyVijayforMarkAntony என பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், ஏற்கனவே விஜய் தற்போது நடித்து வரும் லியோ  படத்தில் விஷால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார், பிறகு கால் சீட் காரணமாக அவர் நடிக்க முடியாமல் போய்விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்