இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது.
சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் படம் ஒரு கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது என்றே கூறவேண்டும். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் வசூலில் தாறுமாறாக சாதனை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது விஜய்க்கு அதிகம் ரசிகர்கள் உள்ள கேரளாவில் பீஸ்ட் படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பீஸ்ட் வெளியான முதல் நாள் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளதாம்.
பீஸ்ட் படம் முதல் நாளில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலிடத்தில் மோகன் லால் நடித்த ஒடியன் படம் உள்ளது. இந்த படம் 6.76 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…