5 நாட்களில் லியோ படம் செய்துள்ள வசூல்.! சாதனையா? சோதனையா?

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 19ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, 5 நாட்களிலேயே ரூ.450 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக, இந்த திரைப்படம் சொந்த நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில், இதற்கு முன்னதாக வசூல் சாதனை செய்திருக்கும் படங்களின் வசூலை முறியடித்து உலக பாக்ஸ் ஆபிஸையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.
லியோ வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமையான நேற்று (அக் 23) தசரா விடுமுறை என்பதால் கூடுதல் வசூல் கிடைத்திருக்கும் என்பதால், ஐந்தாவது நாளான நேற்று கிட்டத்தட்ட ரூ 50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. நான்கு நாட்களில் ரூ.400 கோடியை கடந்த நிலையில், 5 நாட்களில் ரூ.450 கோடியை எட்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
Leo Film: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய்யின் தங்கை எலிசா!
அந்த வகையில், இந்த வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்திருக்கும் என்றும், இந்திய அளவில் ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டை போலவே, கேரளாவில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
செம ஆரம்பமே அமர்க்களம்!! அட்டகாசமான BGM-உடன் ‘தளபதி 68’ பூஜை வீடியோ வெளியீடு!
ஆனால், படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முதல் வசூலை மட்டும் வெளியிட்டது. இதனால், வரும் நாட்களில் படக்குழு அதனை தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025