Vettaiyan
இயக்குனர் நிகாஷ் ஹிதாயத், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இந்நிலையில், கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, RDX திரைப்பட இயக்குனர் நிகாஷ் ஹிதாயத் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் மாஸ்டர்கள் வேட்டையன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். முன்னதாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினரும் ரஜினியை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், RDX பட இயக்குனர் சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் மாஸ்டர்கள் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் புகைப்படத்தில் ரஜினி அணிந்திருக்கும் சட்டை கிழிந்திருக்கும்.
இதனை வைத்து பார்க்கும் பொழுது, சண்டை காட்சிகள் மிகவும் தீவீரமாகவும், இது ஒரு கிளைமாக்ஸ் காட்சிகளாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த வயதிலும், ரஜினிகாந்த் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் தானாக முன் வந்து நடிப்பது அனைவரது கவனத்ததையும் ஈர்க்கிறது.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…