எம்மாடியோ! நடிகை கிரண் பிடிக்கும் சிகரெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

Published by
பால முருகன்

Kiran Rathod : நடிகை கிரண் பிடிக்கும் சிகரெட்டின் விலை  குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் விக்ரமிற்கு ஜோடியாக ஜெமினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றியாளர், திருமலை, சின்னா, திமிரு உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார்.

அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சினிமா துறையை பொறுத்தவரை படங்களில் நடித்து கொண்டு இருந்தால் மட்டும் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் ஆனால், கிரண் சினிமாவை விட்டு விலகிய காரணத்தால் அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகளே வரவில்லை.

அந்த சமயம் பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சோகத்தில் இருக்கிறார். சமீபகாலமாக கிரண் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஊடகங்களிலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கிரண் தான் பிடிக்கும் சிகரெட் விலையை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை கிரண் ”  என்னுடைய சிகரெட் விலை 342 ரூபாய் இருக்கும். கிளாசிக் மெந்தோல் சிகரெட் பிராண்ட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சிகரெட் பிடிக்கும்போது அந்த அளவிற்கு வாசனை வீசாது என்பதால் எனக்கு இந்த சிகரெட் பிடிக்கும்” என கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னது இவ்வளவு விலைக்கு சிகரெட்டா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Recent Posts

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

4 minutes ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

40 minutes ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

1 hour ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

2 hours ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

14 hours ago