Leo Update: இது தான் அதிரடி!! ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு அளித்து…கொண்டாடி கொளுத்தும் லியோ டீம்!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’. தினமும் இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது.
செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், ரசிகர்கள் பெரிதும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.
பலரும் புலம்பிக்கொண்டே சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல கோணத்தில் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
#Badass – #LeoSecondSingle from tomorrow ????????#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @VishnuEdavan1 @SonyMusicSouth #Leo #BadassFromTomorrow pic.twitter.com/Wu3ckSQmRF
— Seven Screen Studio (@7screenstudio) September 27, 2023
இது ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக அமைந்திருக்கிறது, நாளை எப்போது வெளியாகும் என படக்குழு நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொடர் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மாஸ்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.