நாளை ஓடிடியில் வெளியாகிறது ‘கஸ்டடி’ திரைப்படம்.!

Custody - NagaChaitanya

நடிகர் நாக சைத்னயா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ ஜூன் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் மே 12-ம் தேதி வெளியான திரைப்படம் கஸ்டடி. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அரவிந்த் சாமி,பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் படம் செம வசூலை ஈட்டியது.

இந்நிலையில், இந்த திரைப்படம் ஜூன் 9 அதாவது நாளை முதல் பிரபல ஓடிடி தளமான ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாக இருக்கிறது. ஓடிடி-யில் தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படம் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது.

Custody
Custody [Imagesource : Amazon Prime]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்