உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

Published by
பால முருகன்

Lokesh Kanagaraj தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அந்த ஆல்பம் பாடலின் வரிகளை கமல்ஹாசனை தயாரித்து இருக்கிறார். பாடலை ஸ்ருதிஹாசன் எழுதி இசையமைத்து பாடியும் இருக்கிறார். இந்த பாடலுக்கான அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

அதனை தொடர்ந்து சமீபத்தில் அந்த பாடலின் சின்ன டீசரும் வெளியாகி இருந்தது. அந்த டீசர் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது. பலரும் லோகேஷ் கனகராஜை மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால், அந்த பாடலின் டீசரில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்வது போல காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

READ MORE – நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் பெரிய அளவில் காதல் காட்சிகள் இருக்காது அப்படி இருந்தாலே காதலர்களை பிரிப்பது போல காட்சிகளை தான் வைத்து இருப்பார். பல முறை பேட்டிகளிலும் கூட தனக்கு ரொமான்ஸ் மட்டும் வரவே வராது என்று கூறியிருக்கிறார். ஆனால், ரொமன்ஸ் பாடலில் அவர் நடித்துள்ளது ஆச்சிர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

டீசரை பார்த்த பலரும் இதுதான் உலகநாயகன் Fanboy சம்பவம் எனவும் கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் பெரிய அளவு முத்தக்காட்சிகள் இருக்கும் . எனவே அவருடைய ரசிகர் என்பதை லோகேஷ் இப்போது தான் நிரூபித்து இருக்கிறார் எனவும் கலாய்த்து வருகிறார்கள். இந்த பாடல் வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

11 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

12 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago