Thalapathy 68 Movie [file image]
விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட தகவல்களாக வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்திற்கான தலைப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தான்.
அதன்படி, தளபதி 68 படத்திற்கான தலைப்பை வரும் (2024) ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடபட்டிருக்கிறதாம். அதாவது புத்தான்டு பிறந்து சரியாக 12 மணிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக தலைப்பை வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். வழக்கமாக ஒரு திரைப்படம் தலைப்பு வைக்காமல் உருவாகி கொண்டு வருகிறது என்றால் கடைசி நேரத்தில் தலைப்பு வைக்கும் போது வேறு யாரவது முன்பே தலைப்பை பதிவு செய்து வைத்துவிடுவார்கள்.
இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!
இதனால் தலைப்பு விஷயத்தை வைத்து கடைசி நேரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் முன்னதாகவே இதனை கணித்து ஒரு 4 தலைப்பை தேர்வு செய்து பதிவு செய்து வைத்திருக்கிறதாம். அந்த 4 தலைப்பில் எதாவது ஒன்று தான் தளபதி 68 படத்தின் தலைப்பாக வைக்கப்படவுள்ளதாம். விஜய் என்ன தலைப்பு சம்மதம் தெரிவிக்கிறாரோ அந்த தலைப்பு தான் இறுதியாக முடிவு செய்யப்படும்.
எனவே, விஜய் கூறும் அந்த தலைப்பு தான் வரும் புத்தான்டு முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 68’ படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அங்கு படப்பிடிப்பு முடிந்தது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!
மேலும், ‘தளபதி 68 ‘ திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், அஜ்மல் அமீர், வைபவ், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…