AJITH Latest [File Image]
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது அஜித் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளை நிற முடியுடன் ஒரு கண் வீக்கம் அடைந்தது போல இருக்கிறார்.
கடைசியாக துணிவு திரைப்படத்தில் மாஸான ஒரு கெட்டப்பில் இருந்த நிலையில், தற்போது க்ளீன் சேவ் செய்து ஆளே மாறி போய் இருக்கிறார். இதனால் இப்போது வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித் குமாரா இது? என்பது போல கேள்வி எழுப்பி வருகிறார்கள். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மங்காத்தா மாதிரி ஹிட் ஆகணும்! ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றிய படக்குழு?
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் இன்னும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதையும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான எந்த அறிவிப்பையும் வெளியாடாமலே லைக்கா நிறுவனம் இருக்கிறது. படப்பிடிப்பில் இருந்து வெளியாகும் புகைப்படங்களை வைத்து தான் படப்பிடிப்பு நடந்து வருவதை ரசிகர்கள் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் எந்த மாதிரி ஒரு கெட்டப்பில் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு வேளை இது தான் விடாமுயற்சி படத்தின் ஒரு கெட்டப் -ஓ என கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில் அஜித் இந்த திரைப்படத்தில் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…