Categories: சினிமா

Manthra : கவர்ச்சி நடிகை மந்திரா சினிமாவை விட்டு ஓடிய காரணம் இது தான்! பகீரை கிளப்பிய சினிமா பிரபலம்!

Published by
பால முருகன்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த நடிகை மந்திரா தமிழ் சினிமாவில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான பிரியம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, ரெட்டை ஜடை வயசு, கல்யாண கலாட்டா, கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவருக்கு அந்த சமயம் பல ரசிகர்கள் கூட்டம் இருந்த காரணம் என்னவென்றால், அவர் கவர்ச்சியாக நடித்த கதாபாத்திரங்கள் தான். எந்த வித கிளாமர் ரோலாக இருந்தாலும் சரி நடிகை மந்திரா மறுக்காமல் நடித்துக்கொடுத்துவிடுவார். அந்த சமயம் அழகாக இருந்த காரணத்தால் என்னவோ இவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ச்சியாக குவிந்தது.

ஆனால், மந்திரா ஓவராக கவர்ச்சியாக நடித்த காரணத்தால் என்னவோ அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி தமிழ் சினிமாவே விட்டே ஓடிவிட்டாராம். கடைசியாக தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரே ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிகை மந்திரா நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு மந்திரா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

அந்த சமயம் உடல்  அமைப்பு கவர்ச்சிகரமாக இருந்த காரணத்தால் அவருடைய சினிமா வாழ்க்கைக்கு அது உதவியாக இருந்தது. எனவே தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் நடித்தாலே கவர்ச்சியாக தான் நடிப்பார் என அவருக்கு நல்ல படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம்.

எனவே இதனால் நொந்து போன நடிகை மந்திரா அப்படியே ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்தது போல மீண்டும் தமிழ் சினிமாவை விட்டு விட்டு தெலுங்கு சினிமாவிற்கு ஓட்டம் பிடித்துவிட்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

3 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

4 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

4 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

5 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

6 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

7 hours ago