,

சிவகார்த்திகேயன் கூட நடிக்கணும்னு கெஞ்சினத்துக்கு இது தான் காரணம்! – வடிவுக்கரசி!

By

சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் விருப்பபடுவது உண்டு. அந்த வகையில், பழம்பெரும் நடிகையான வடிவுக்கரசியும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்பட்டது அனைவர்க்கும் தெரிந்தது தான். நிகழ்ச்சி ஒன்றின் விழா மேடையில் கூட சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் எனக்கு அந்த வாய்ப்பு வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பு அலுவலகத்திற்கு கூட வந்து கேட்கிறேன் என்பது போல வாய்ப்பு கேட்டு இருந்தார்.

பெரிய நடிகை மேடையில் இப்படி வாய்ப்பு கேட்டது சற்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க வெளிப்படையாக வாய்ப்பு கேட்டது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை வடிவுக்கரசி “எனக்கு சிவகார்த்திகேயன் ரொம்பவே பிடிக்கும். அவரை பார்க்கும் போது நம்மளுடைய விட்டு பிள்ளை போலவே இருக்கும். எனவே, அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

எல்லா நடிகர்களுடனும் நான் நடித்துவிட்டேன். சிவகார்த்திகேயன் உடனும், விஜய் ஆண்டனி உடனும் மட்டும் தான் நான் நடிக்கவில்லை. இவர்கள் இருவருடன் தான் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் நான் தான் வெற்றிபெற்றேன். இரண்டு முறை அவர் தான் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்தார். அந்த இரண்டு முறையும் நான் தான் முதல் வெற்றியாளர்.

அந்த சமயத்தில் இருந்து நான் சிவகார்த்திகேயனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நம்ம வீட்டு குழந்தை வளர்ந்து அவரை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அந்த பெருமைக்காகவே அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. இதன் காரணமாக தான் நான் அவருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” எனவும் நடிகை வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023