Thalapathy68 [FILE IMAGE]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
‘தளபதி 68’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 3D VFX ஸ்கேனுக்காக சமீபத்தில் தளபதி விஜய் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றார். அண்மையில் கூட அவர் விமானம் நிலையத்தில் வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இப்பொது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்திருக்கும் பிரபல ‘Lola VFX’ மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜய் பாடி ஸ்கேனிங் செய்யும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படத்தில் இந்த VFX-ன் மூலம் படத்தில் வயதான கதாபாத்திரம் எப்படி இருந்ததும் என்றும், இளம்வயது தோற்றம் எப்படி இருக்கிறது எனவும், படக்குழு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வேலை செய்து வருகிறது.
இதற்கு முன்னதாக, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்துக்காக கமல்ஹாசன் இந்த Lola VFX-க்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்பொழுது, அந்த இடத்துக்கு விஜய் சென்று டெஸ்ட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பயங்கரமாக எகிறியுள்ளது. மேழும், இதனை வைத்து பார்க்கும் பொழுது, வெங்கட் பிரபு ஷங்கர் லெவலில் மிகவும் பிரம்மண்டமாக யோசிக்கிறரோ என்பது போல் தெரிகிறது.
ஒரு தவலின்படி, தளபதி 68 படத்தில் ஜோதிகா, சிம்ரன், பிரியங்கா மோகன், மாதவன், பிரபுதேவா, ஜெய் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, திலிப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகளுடன் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…