இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!
வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் 52 கோடிகள் வசூல் செய்து பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் விக்ரமிற்கு ஒரு கம்பேக் படமாகவும் மாறியுள்ளது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில், படம் வெளியாகி 1 வரங்களை கடந்திருக்கும் நிலையில், படம் உலகம் முழுவதும் 52 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இன்னுமே படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தடைகளை தாண்டி படம் வெற்றிபெற்றுள்ள நிலையில், படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு பற்றி நடிகர் விக்ரம் வீடியோ வெளியீட்டு சில விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ஒரே ஒரு வாழ்கை இந்த வாழ்கை இருக்கிறதே யப்பா… நம்மளை பந்துபோல தூக்கி வீசுது . எதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு நம்மளை அந்த பந்து தூக்கி வீசிவிடுகிறது. வாழ்க்கையில் அந்த மாதிரி சில விஷயங்களை சந்திக்கவேண்டியிருக்கிறது.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் வீர தீர சூரன் சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு படத்தை பார்த்துவிட்டு பலரும் படம் என்ன இவ்வளவு அருமையாக இருக்கிறது என்று கூறி எங்களுக்கும் எதிர்பார்ப்புகளை ஏற்றிவிட்டார்கள். ஆனால், கடைசியில் பார்த்தால் படம் வெளியாவதற்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. டெல்லி உயர்நிதி மன்றம் 4 வாரங்கள் படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் நானும் படக்குழுவும் எப்படியாவது இந்த படத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
இந்த மாதிரி படத்தை மக்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை என போராடி மக்களிடம் கொண்டுவந்தோம் படத்திற்கும் நீங்கள் அருமையாக வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். இன்னும் அதிகமாக ஆகும் என்று தான் படத்தின் வரவேற்பை வைத்து பார்க்கும்போது சொல்ல முடிகிறது. மக்கள் படத்திற்கு கொடுத்துவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி” எனவும் விக்ரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025