அடேங்கப்பா!! GOAT படத்தின் டிக்கெட் விலை இவ்ளவா.! ரசிகர்கள் புலம்பல்..
சென்னை : விஜய் நடித்துள்ள ‘GOAT’ படத்தின் டிக்கெட் ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக 390 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
தளபதி விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப்” ஆல் டைம் (GOAT) திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் சென்னை ரோகிணி திரையரங்கில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.390-க்கு டிக்கெட் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலையானது, டிக்கெட் மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸுக்கு சேர்த்தும் கட்டணம் இணைக்கப்பட்டுள்ளதாகே கூறப்படுகிறது.
இப்படி இரண்டும் சேர்த்துதான் டிக்கெட்டின் விலை ரூ.390-க்கு அந்த திரையரங்கு சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், நாங்கள் படத்தை பார்க்க தானே டிக்கெட் புக் செய்கிறோம். அதற்கு ஏன்? ஸ்நாக்ஸுக்கு சேர்த்து பணம் நீங்களே வாங்குகிறீர்கள் என புலம்பி வருகிறார்கள்.
விஜய் திரைப்படம் எப்போது வெளியானாலும் அதன் டிக்கெட் விலை அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும், சிலர் பிளாக்கில் டிக்கெட் விற்பதும் உண்டு. அந்த வரிசையில், இப்பொது அதிகாரப்பூர்வமாக ரூ.390-க்கு டிக்கெட் விற்பது விவாதத்தை தூண்டியுள்ளது.
முன்னதாக, திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? கூடுதல் காட்சிகள்திரையிடப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் லுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒரு புகார் அளித்திருக்கும் சூழலில், இவ்வாறான புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? திரையரங்கு சார்பில் விளக்கு அளிக்கப்படமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
GOAT இன் கேரளா
GOAT இன் கேரள விநியோக உரிமையைப் பெற்றுள்ள ஸ்ரீ கோகுலம் மூவிஸ், செப்டம்பர் 5 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவித்தது.
படத்தின் தொடக்க நாளில் சுமார் 720 காட்சிகள் இருக்கும் என்றும், இது மலையாளம் படத்திற்கு கிடைக்காத ஒரு தமிழ் படத்திற்கு கிடைக்கும் அதிகமாக காட்சிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக, கேரளாவில் இதற்கு முன் வெளியான, லியோவின் சாதனையை GOAT முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தி கோட்
விஜய் தவிர, GOAT படத்தில் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். GOAT படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு கையாள, ராஜீவன் கலை இயக்கம், திலீப் சுப்பராயனின் அதிரடி நடனம் அமைக்க. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.