Vaazhai Trailer [file image]
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்தின் டிரைலர் வெளியானது.
வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். படம் வெளியாவதையொட்டி படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் பார்க்கும்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
எதிர்பார்ப்பு அதிகமானது போல டிரைலரில் எமோஷனல் காட்சிகளையும் மாரி செல்வராஜ் வைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக, சிறுவன் தற்கொலைக்கு முயற்சி செய்வதில் இருந்து இசை வரை அனைத்தும் நம்மளை எமோஷனலாக வைத்துள்ளது.
நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து அதில் பயணம் செய்த சிறுவர்கள் ஒரு சிலர் காயத்துடன் தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என மாரி செல்வராஜ் பேசி இருந்தார். எனவே, டிரைலரை வைத்து பார்க்கையில், அந்த தகவல் உண்மை தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், முன்னதாக அந்த பேட்டியில் பேசும்போது தன்னுடைய சின்ன வயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் ‘வாழை’ படத்தை எழுதி இருந்தேன் என கூறியிருந்தார். அவர் பேசியதையும் டிரைலரையும் வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக பெரிய அளவில் விமர்சன ரீதியாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…