Chandramukhi 2 [FILE IMAGE]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும்.
அப்போது, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அண்மையில், படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு.
அப்போது, ட்ரைலர் ரசிகர்களை பெரிதும் திருப்த்தி படுத்தவில்லை, எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால், ட்ரைலரை மெருகேத்தி சில முக்கிய காட்சிகளை இணைத்து தற்பொழுது, புதிய ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத் மோதிக்கொள்ளும் மாஸ் காட்சி பெரிதும் ஈர்த்துள்ளது.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது. தற்போது, சந்திரமுகியின் இரண்டாம் பாகம் வரும் 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…