மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெங்கட் பிரபு அடல்ட் காமெடி படமான மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியில் இந்த படத்திற்கு நல்ல ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஆம் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகா சைதன்யா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் சார்பாக இப்படத்தை ஶ்ரீனிவாச சித்துரி தயாரிக்கிறார்.பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக “NC22” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடவுள் நல்லவர் எல்லாம் வல்ல இறைவன் மற்றும் எனது ரசிகர்களின் ஆசியுடன் எனது அடுத்த இருமொழிப் படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என வெங்கட் பிரபு இந்த படத்திற்கான அறிவிப்பை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…