தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு காரணமே விஜய் அஜித் தான்.! பிரபல நடிகர் காட்டம்.!

இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமாவின் பொற்காலம் பாரதி ராஜா சார், நாங்க படம் பண்ணிக்கிட்டு இருக்கும் போது தான். இப்பொது எல்லாம் அப்படி இல்லை.அதை நான் அணித்தரமாக அடித்து சொல்ல முடியும். தமிழ் படங்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்றால், எல்லா மொழிகளின் படமும் இன்று தமிழ்நாட்டில் கொடி கட்டிப்பறக்கிறது.
சமீபத்தில் வந்த விஜய் படமோ இல்ல அஜித் படமோ சினிமாவிற்கு செலவு பண்றது இல்லை.தனக்கு செலவு பன்றாங்க.. 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போம் எப்படி படம் எடுக்க முடியும்.?கண்டிப்பாக எடுக்க முடியாது.
அதனால் இந்த மேடையை ஒரு சந்தர்பமா எடுத்துக்கிட்டு வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போது 10% சம்பளம் பெற்றோம், 90% படத்திற்கு போகும். முந்திய காலகட்டத்தில் நம்ம கதையில் வெற்றிபெற்றோம்..ஒரு மேக்கிங்கில் வெற்றிபெற்றோம்,இப்போ எல்லா இடத்திலையும் பின் தங்கிட்டு இருக்கோம்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025