Vijay-Trisha: கில்லி டூ லியோ…சூப்பர் ஜோடி! வைரலாகும் வேலு – தனலட்சுமியின் புகைப்படம்!

GILLE -LEO

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுடைய ஜோடி இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் இவர்களுடைய ஜோடி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா ஜோடி கோலிவுட்டில் மறக்க முடியாத ஜோடிகளில் ஒன்றாக உள்ளது. இவர்கள் இருவரின் பயணம் கில்லி படத்தில் தொடங்கி குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இதில், கில்லி அவர்களின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது, அந்த வகையில் படத்தில் இடப்பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நீங்காமிடம் பிடித்துள்ளது. ஆனால், ஓரிரு படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ள இந்த ஜோடிகளின் நடிப்பில் 2008-ல் வெளியான கடைசி படம் குருவி.

2008 க்குப் பிறகு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ள ‘லியோ’ திரைப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மெருகேற்றி உள்ளரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், நேற்று லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அன்பெனும்’ என தொடங்கும் காதல் பாடல் வெளியானது.

இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் கில்லி படத்தை நினைவுபடுத்த தொடங்கிவிட்டனர். கில்லி வேலு – தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்- திரிஷாவை நினைவுபடுத்திய ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்பெனும் பாடலுடன் லிங் செய்து வைரலாக்கி வருகின்றனர். ஒரு ரசிகர் ஆதி படத்தின் பாடல் கட்சிகளான காஷ்மீர் பகுதிகளை இத்துடன் சேர்த்து அழகு பார்த்துள்ளார்.

த்ரிஷா

பொன்னின் செல்வன் 1 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரி என்ட்ரி கொடுத்த த்ரிஷா தற்பொழுது கோலிவுட்டில் பல பெரிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. இப்பொது, அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்