ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10வது பாகத்தில் நடிக்க நடிகர் டிவைன் ஜான்சனை (ராக்) நடிக்க அழைத்து வின் டீசல் கடிதம் எழுதியுள்ளார்.
உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களால் கவரப்படும் திரைப்பட சீரிஸ்களில் முக்கியமானது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இது வரை ஒன்பது பாகங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டுவிட்டன. அடுத்தது கடைசி பாகமாக 10வது பாகம் தயாராக உள்ளது.
இதில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 5வது பாகமான ஃபாஸ்ட் ஃபைவ் திரைப்படத்தில் இருந்துதான் இந்த படத்திற்கு இந்தியாவில் மாபெரும் மார்க்கெட் உருவானது. அதில் இருந்து, இந்திய மார்க்கெட்டை குறிவைத்தே இந்த திரைப்படம் இந்திய மசாலா கமர்சியல் திரைப்படம் போல, ரேஸிங், செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என கலந்துகட்டி அடித்து வருகின்றனர். அந்த பாகத்தில் இருந்து தான் WWF புகழ் ராக் என அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் இந்த குழுவில் இணைந்தார். அது படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியது.
ஆனால், சில பக்கங்களே தொடர்ந்த ராக், கடைசியாக வெளியான பாகத்தில் இல்லை. அடுத்து வர இருக்கும் கடைசி பாகத்தில் நம்ம ராக்-ஐ ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் கதாநாயகன் வின் டீசல் நடிப்பதற்கு அழைத்துள்ளார். அவர் வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாம் சேரும் நேரம் வந்துவிட்டது. ஃபாஸ்ட் 10கான நேரம் வந்துவிட்டது. வந்து சேர்ந்துவிடு நண்பா. என உருக்கமாக அழைப்பு கடிதம் எழுதியுள்ளார் வின் டீசல். இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…