Priyanka Chopra [File Image]
பிரியங்கா சோப்ரா : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தன்னை பற்றிய விவரங்களையும், தான் நடிக்கும் படங்கள் பற்றியும் அடிக்கடி அவர் பதிவிடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை காயம் அடைந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
கழுத்து பகுதியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவே வெளியிட்டுள்ளார். ‘The Bluff’ திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உங்களுக்கு என்னாச்சு? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மேலும், சிலர் பாதுகாப்புடன் படத்தில் நடிங்கள் எனவும் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். 19 -ஆம் நூற்றாண்டில் கரீபியன் பகுதியில் நடைபெறும் கதையை வைத்து இந்த The Bluff படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா கடற்கொள்ளையர் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரூசோ பிரதர்ஸின் பேனர் ஏஜிபிஓ ஸ்டுடியோஸ் மற்றும் அமேசானின் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
பிரியங்கா சோப்ரா இந்த படத்தை தவிர ஹாலிவுட் படமான ஹெட் ஆஃப் ஸ்டேட்டிலும் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார்களான இட்ரிஸ் எல்பா மற்றும் ஜான் செனா ஆகியோர் மாநிலத் தலைவராக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…