கோட் அடுத்த அப்டேட் எப்போது? மனம் திறந்த தயாரிப்பாளர் அர்ச்சனா!

goat movie

விஜய் : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார் மற்றும் ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், மைக் மோகன், வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்பொழுது, G.O.A.T படத்தின் மூன்றாவது சிங்கிள் தொடர்பான புதிய அப்டேட் ஆகஸ்ட் 1-ல் வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 5இல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, GOAT முடிக்கப்படாத VFX வேலை காரணமாக ரிலீஸில் தாமதத்தை சந்திக்க நேரிடும் என்று சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அனைத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் இந்த வெளிப்பாட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக அடுத்த அப்டேட் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கோட் படத்தின் இந்த புதிய அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்