அந்த மாதிரி கேள்வியால் கடுப்பான பிரியா ஆனந்த்! பெசன்ட் ரவி கொடுத்த பதிலடி?

Priya Anand sad

சென்னை : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் அவருடன் சிம்ரன் , பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ப்ரோமோஷனின்  போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியால் மிகவும் கடுப்பாகியுள்ளார்.

சென்னையில் படத்திற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதில் பேசிக்கொண்டு இருந்த நடிகை பிரியா ஆனந்த் எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெசன்ட் ரவி ஜிம் ஒர்க் -அவுட் ஒன்று கொடுத்தார். அதனை செய்து எனக்கு இப்போ வரைக்கும் இடுப்பு மிகவும் வலி என்று கூறினார். இதனை பார்த்த கீழே ஒரு பத்திரிக்கையாளர் இடுப்பு வலின்னு சொன்னீங்க என்று கேட்க உடனே பிரியா இவர் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு இப்படி கேள்வி கேட்கிறார் என அண்ணா நாம் இருவரும் ஒரே ஊர் எதற்காக இப்படி கேட்கறீர்கள் என்று கேட்டார்.

பிரியா ஆனந்த் அப்படி சொல்லியும் அந்த பத்திரிக்கையாளர் கேள்வியை விடாமல் பிரியா ஆனந்த்க்கு இடுப்பு வலி வந்தது போல உங்களுக்கும் வந்ததா என்று பிரசாந்த்திடம் கேள்வியை கேட்டார், இதனால் சற்று வேதனை பட்ட பிரியா ஆனந்த் இந்த மாதிரி கேள்விகள் கேட்டு இது போன்ற தருணங்கள் வரும்போது எதுக்கு தான் தமிழ் தெரிஞ்சதோ என்று கவலைப்படுவேன் என வேதனையுடன் தெரிவித்தார்.

பின் இயக்குனர் தியாகராஜன் அந்த பத்திரிக்கையாளரிடம் பெண்கள் உடற்பயிற்சி செய்தால் இடுப்பு வலிக்கும் ஆண்களுக்கு வலிக்காது தவறாக கேள்வி கேட்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதைப்போல மேடையில் இருந்த பெசன்ட் ரவியும் எந்த நேரத்தில் எந்த கேள்வியை கேட்குறீங்க? நீங்களும் வாங்க உங்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கு நான் உடற்பயிற்சி செய்ய சொல்லி தருகிறேன் என கூறி அந்த  பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்தார்.

ஒரு பொது மேடையில் நடிகையிடம் இப்படியான கேள்வியை கேட்டு அந்த நடிகை அதற்கு தமிழ் எதுக்காக தெரிந்தது என்று கவலையுடன் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நெட்டிசன்கள் கேள்வி கேட்ட அந்த பத்திரிக்கையாளருக்கு எதிராக ஒரு மேடையில் பெண்ணிடம் அறிவு இல்லாமல் இப்படியா கேள்வி கேட்பிங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters
Donald Trump and cars