தீபாவளி : ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரலாறு.!

வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் மாதப்படி இந்த வருடம் ஐப்பசி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரே நாள் தீபாவளி :
இந்த தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு புராண கதைகள் ஒவ்வொரு சமூகத்திலும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து புராணங்களிலும் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது என்பது ஆச்சர்யமான உண்மை. அதில் எந்தெந்த புராண கதைகளின் படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்….
கிருஷ்ணர் – நரகாசூரன் :
திருமால், வராக அவதாரத்தில் இருந்த போது, பூமாதேவிக்கும் வராக அவதாரதிற்கும் பிறந்தவன் நரகாசூரன். பிரம்மனை நோக்கி தவம் புரிந்து தனது தாயால் மட்டுமே உயிரிழக்கும்படியான சாகா வரம் கேட்டு தவம் புரிந்தான். அதன்படி பிரம்மனும் வரம் தர, அதன் பிறகு தனக்கு சாவே இல்லை என்பதை உணர்ந்து மக்களை துன்புறுத்த துவங்கினான்.
இதனை அடுத்து கிருஷ்ண அவதாரத்தில் இருந்த திருமால், தனது மனைவி பூமாதேவியின் அவதாரமான சத்யபாமாவை நடனமாட வைத்து, அந்த நடனத்தில் நரகாசூரன் மயங்கி பின்னர் கிருஷ்ணரை அழிக்க அம்பு எய்வான். அந்த சமயம் தனது கணவர் மேல் அம்பு படாமல் தடுத்து அதனை கொண்டு நரகாசுரனை அழித்து விடுவாள் பூமாதேவியின் அவதாரமான சத்யபாமா.
தன் மரணத்தை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என நரகாசூரன் மரண தருவாயில் கேட்டுகொண்டதன் பெயரிலும், நரகாசுரனை வதம் செய்து தலைக்கு எண்ணெய் வைத்து கிருஷ்ணர் நீராடிய காரணத்தாலும் அன்றைய தினம் தலைக்கு எண்ணெய் வைத்து நீராடி, புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாக ஒரு வரலாறு கூறுகிறது.
ராமர் வனவாசம் திரும்பிய நாள் :
திருமால் ராமர் அவதாரத்தில் இருந்த போது, மனைவி சீதாவை ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்று விடுவார். அதன் பிறகு தனது படைபலத்துடன் ராமன் இலங்கை சென்று ராவணனை வீழ்த்திவிட்டு நாடு திரும்புவார். பிறகு 14 ஆண்டுகள் ராமன், சீதா வனவாசம் அனுபவித்து விட்டு நாடு திரும்பிய நாளை தீபாவளி தினமாக கொண்டாடுகிறார்கள் ஒரு புராண வரலாறு கூறுகிறது.
இன்னும் சில வரலாறுகள்…
1577ஆம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று, பொற்கோவில் கட்டுவதற்கு துவங்கப்பட்ட நாளை தீபாவளி தினமாக சீக்கியர்கள் கொண்டாடி வருகின்றனர். உஜ்ஜயினியில் விக்ரமாதித்ய அரசன் முடிசூட்டிய நாளை தீபாவளியாக கொண்டாடியதாகவும் ஒரு வரலாறு உண்டு. மேலும் பல்வேறு இடங்களில் விவசாய அறுவடை தினமாகவும் தீபாவளி தினம் கொண்டாடபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025