வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது.
சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
பெருமாள் ரத்தின அங்கி அணிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மங்கள வாத்தியம் முழங்க பக்தர்களின் கோவிந்தா என்ற கோஷதுடன் பெருமாள் சொர்க்க வாசலை கடந்தார். இந்த நிகழ்வை காண அமைச்சர் சேகர்பாபு உட்பட லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்களும் வழிபாடு செய்தனர்.
அதேபோல் உலக பிரிசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்அதி காலை 12: 45க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது . சிறப்பு அபிஷேக நடைபெற்று பூலோக வைகுண்டமாகவே எம்பெருமான் காட்சியளித்தார்.அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4; 33 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025