வரலாற்றில் இன்று…விடுதலைப் போராளி டி. எஸ். சொக்கலிங்கம் பிறந்த தினம்.!!

D. S. Chokkalingam

டி. எஸ். சொக்கலிங்கம் பிறப்பு 

டி. எஸ். சொக்கலிங்கம் 1989-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள். சொக்கலிங்கம் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர் சொக்கலிங்கம்.

சொக்கலிங்கத்தின் தந்தை பல்பொருள் அங்காடியை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். ஆஷ் கொலை வழக்கில், சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனையடுத்து, குடும்பத்தினர் நடத்தி வந்த அந்த  பல்பொருள் அங்காடியை  சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார். இதனால் அவருடைய கல்வி தடைப்பட்டது.

இதழியல் துறையில் சொக்கலிங்கம் 

காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920ஆம் ஆண்டு தன்னுடைய 21வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். “தமிழ்நாடு” இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். ‘காந்தி’ என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். அதனை தொடர்ந்து வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி என்ற  இதழைத் தொடங்கினார்.

தினசரி என்ற நாளிதழைத் தொடங்கிய சொக்கலிங்கம் 

1944 இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.

இன்று பிறந்ததினம் 

 இன்று தான் டி. எஸ். சொக்கலிங்கம் பிறந்த தினம் இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘பேனா மன்னன்’ என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். இவர் கடந்த 1966 -ஆம் ஆண்டு மறைந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்