LSGvsCSK: சென்னை- லக்னோ ஆட்டம் மழையால் நிறுத்தம்.!

CSK bowl lsg bat

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 125/7 ரன்கள் குவித்திருந்த போது ஆட்டம் மழையால் நிறுத்தம்.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா ஸ்டேடியத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரர்கள் மனன் வோஹ்ரா(10) மற்றும் கைல் மயர்ஸ்(14) ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாற, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன்கள் குவிக்க தவறினர். ஆயுஷ் படோனி மட்டும் நிதானமாக நின்று விளையாடி, தேவையான பந்துகளில் ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார்.

இதனால் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லக்னோ அணியில், ஆயுஷ் படோனி 59* ரன்களும், பூரன் 20 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பில் மொயின் அலி, பதிரனா  மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்