வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், தனது Truth Social தளத்தில், “சீனா தவறாக விளையாடியது, அவர்கள் பதற்றமடைந்துவிட்டனர் என கூறியுள்ளார். இரண்டு நாடுகளும் மாறி மாறி இந்த சுங்கவரி விதித்த காரணத்தால் இது உலக பங்குச் சந்தைகளை பெரிதும் பாதித்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான S&P […]
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் “டிபார்ட்மெண்ட் ஆஃப் கவர்ன்மெண்ட் எஃபிஷியன்சி” (DOGE) என்ற துறையை தலைமையேற்று, அரசு செலவுகளைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, எலான் மஸ்க் விரைவில் இந்த பதவியிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, எலான் மஸ்க் ஒரு “சிறப்பு அரசு ஊழியர்”என்ற முறையில் பணியாற்றுகிறார். இந்த பதவியில் உள்ளவர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 130 […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்து இருந்தார். டொனால்ட் டிரம்ப் இந்த வரி உத்தரவை அறிவித்த உடனே எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் இருவரும் இந்த வரி உத்தரவுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஒட்டாவாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு நாடுகளை பொருத்தும் 49 சதவீதம் வரையில் வரி விதிக்கும் நடைமுறையை அறிவித்தார். இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி தான் அமெரிக்க நேரம் படி (நேற்று ஏப்ரல் 2) அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த (Liberation Day ) என்கிற நிகழ்ச்சியில் பல நாடுகளுக்கு வரி விதிப்பதாக அறிவித்தார். எந்தெந்த நாடுகளுக்கு அவர் எவ்வளவு வரி விதித்தார் ஏற்கனவே அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதித்துள்ளது என்பது பற்றிய விவரங்களையும் அவர் […]
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை அறிவித்திருக்கிறார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 3, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, இந்தியாவுக்கு 26% சுங்கவரியும், சீனாவுக்கு 34% சுங்கவரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய வர்த்தகப் போரின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. எந்தெந்த நாடுகளுக்கு அவர் எவ்வளவு வரி விதித்துள்ளார்? இதற்கு பதில் நடவடிக்கையாக […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், உலக நாடுகளின் இறக்குமதிக்கு வரி விதித்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப், “America First” கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் மீதும் 10% முதல் 49% வரை ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா மீது 26% வரி […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். இதனை அமெரிக்க நேரப்படி (ஏப்ரல் 2), 2025 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டிரம்ப் அறிவித்தார். எதற்காக எந்த வரி? இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் […]
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி வருவதற்கு காரணமே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியது தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவித்தது. எனவே, குஜராத் அணி அவரை 12.25 கோடி கொடுத்து வாங்கியது. எனவே, குஜராத் அணிக்கும் […]
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று உலக பணக்காரர்களின் பட்டியலை 39வது ஆண்டாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் 342 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்துமதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்கையில் 75% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மஸ்கின் டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் […]
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக பகல்-இரவு பாராமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் மியான்மரின் மையப்பகுதியான மண்டலே மற்றும் சாகைங் பகுதிகளை கடுமையாக பாதித்தது. அதைப்போல, நூற்றுக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், மடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. உயிரிழப்பு முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, […]
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய ஷாக்கிங் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் அரசு நிறுவனம் ஒரு மெகா நிலநடுக்கம் அதாவது ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது. அந்த ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும், இதனால் மூன்று லட்சம் பேர் உயிரிழந்து விடுவார்கள். இதன் காரணமாக கடலில் சுனாமி ஏற்படும், பல […]
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் (Petronas) என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் இன்று (ஏப்ரல் 1) காலை வெடிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்று எதிர்பாராத விதமாக 9 மாதங்கள் அங்கு சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 20 அன்று பூமிக்குத் திரும்பினார்கள். இருப்பினும், நீண்ட மாதங்களாக அவர்கள் விண்வெளியில் இருந்த காரணத்தால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்ப அவர்களுடைய உடல் நிலை […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான இம்ரான் கான், தற்போது ஊழல் புகாரில் சிக்கி கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 14 ஆண்டு சிறைத்தண்டனையை அவர் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றசாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்டுள்ளன என PTI கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான், இம்ரான் […]
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஈரான் […]
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது சாகைங் பால்ட் (Sagaing Fault) பகுதியில், மண்டலே நகருக்கு அருகே, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது கடந்த நூற்றாண்டில் மியான்மரை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று […]
பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் மையப்பகுதி சாகைங் (Sagaing) நகருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே (Mandalay) மற்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 -ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் […]
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-க்கு 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கீழ், விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளார். எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் X-தளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அப்போதிருந்து, X-ன் மதிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல விவாதங்கள் எழுந்தன. இப்போது, வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, […]
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 […]