புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை. 18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 2 நாள்களுக்கு முன்னதாக G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தபோது, டிரம்ப் என்னை டெலிபோன் மூலம் ‘வாஷிங்டன் வழியாக வாருங்கள், இரவு உணவு சாப்பிடலாம், […]
ஈரான் : ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்து நடவடிக்கைகாக ஈரான் தனது வான்வெளி கட்டுப்பாடுகளைத் திறந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் அடங்கிய மற்றொரு குழு நேற்றிரவு டெல்லியை வந்தடைந்தது. இந்தியா ஜிந்தாபாத் என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர். […]
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முடிவை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 19) அறிவித்தது. அதன்படி, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள தூதரகத்தின் இணையதளத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரானை தொடர்ந்து ஈரானை மத்திய அரசின் […]
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார். மேலும், “மாற்றம் சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள், உறுதியான மக்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள். நமது மொழிகள் நமது கலாச்சாரத்தின் […]
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. காரணம் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கமல் கூறியது சர்ச்சையானது. அவரது கருத்து கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் கருத்தை கண்டித்து பல கன்னட சங்கங்கள், அவரது படத்தை மாநிலத்தில் வெளியிடக்கூடாது என்றும், படம் அம்மாநிலத்தில் வெளியிடப்படுவதைத் தடுக்க நீதிமன்றத்தையும் […]
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவை உலுக்கிய துயர சம்பவமாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், தனது மனைவியின் சாம்பலை கரைப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். இவரது மறைவால், லண்டனில் 4 மற்றும் 8 வயதுடைய அவரது இரு குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உருக்கமான அறிவிப்பு […]
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 241 பயணிகள் உட்பட 279 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன், “விபத்து […]
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல், அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, வாக்காளர்களுக்கு சேவைகளை எளிமையாக்கவும், தாமதங்களை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிமுறைகளின் கீழ், விண்ணப்பங்கள் ஆன்லைனில் (https://voters.eci.gov.in/ அல்லது […]
ஈரான் : ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் சிலர் காயமடைந்ததை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியது. தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆம், டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இஸ்ரேல் தாக்குதலில் 5 இந்திய […]
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இதில் முக்கியமானவை சாகித்ய அகாடமி விருது, பால சாகித்ய புரஸ்கார் (குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது), மற்றும் யுவ புரஸ்கார் (இளம் எழுத்தாளர்களுக்கான விருது) ஆகியவை அடங்கும். 2025 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அவரது சிறார் நாவலான ‘ஒற்றைச் சிறகு […]
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ், விமான விபத்தில் உயிரிழந்த தன் சகோதரர் அஜய்யின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் இன்னும் முழுதும் குணமாகாத நிலையில், குஜராத் அருகேயுள்ள டியு தீவில் நடந்த தனது சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் […]
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டண பாஸ் வழங்கும் நடைமுறை ஆகஸ்ட் 15இல் தொடக்கம், ரூ.3,000க்கு பாஸ் பெற்றால் ஓராண்டுக்கோ அல்லது 200 பயணங்களோ சுங்கக் கட்டணம் தனியாக செலுத்தாமல் பயணிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் […]
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்படுத்து சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 241 பயணிகள் மற்றும் 38 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஜூன் 18, 2025 அன்று தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மோடி தெளிவாக விளக்கினார். உரையாடலின் போது மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று ட்ரம்பிடம் திட்டவட்டமாகக் […]
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்படுத்த சில நிமிடங்களில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 241 பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து, மீட்புப் பணிகளின்போது 70 தோலா (சுமார் 700 கிராம்) […]
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக் டாக்ஸி சவாரிகளை வழங்குவதில் ஒரு காலத்தில் பிரபலமான ரேபிடோ, பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான கவலைகள் காரணமாக ஒழுங்குமுறை விமர்சனத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து, பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் பைக் டாக்ஸிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் (ஜூன் 16) முடிவுக்கு வந்தது. இந்நிலையில், Uber நிறுவனம் ‘Moto’ என்ற பைக் டாக்ஸி சேவையை ‘Moto […]
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதிய பின்னர் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர், அவர்களில் 241 பேர் இறந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் விடுதியின் சுவரில் மோதியதால் மாணவர்கள் சிலரும் இந்த விபத்தில் பலியாகினர். ஏர் […]
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப் பறக்க இருந்தது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் இரண்டாவது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது இதுவாகும். தகவலின்படி, ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் AI-159 அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட இருந்தது. […]
கர்நாடகா : தக்லைஃப் திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று கொண்டு வருகிறது. இருப்பினும், திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கன்னட தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் […]
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில் பயணிக்கவேண்டுமா என்கிற அளவுக்கு யோசிக்க தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே, சமீபத்தில், அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி, 274 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் […]