beetroot
ஜவ்வரிசி -ஆறு மாத குழந்தையின் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி பீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஜவ்வரிசியை இரு முறை கழுவி விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரும் ஏலக்காயும் சேர்த்து வேக வைக்கவும்.
பீட்ரூட்டை தோல் சீவி அரைத்து அதன் ஜூசை மட்டும் வடிகட்டி கொள்ளவும். ஜவ்வரிசி பாதி வந்து கொண்டிருக்கும்போதே இந்த பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கிளற வேண்டும். பீட்ரூட்டின் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடம் ஆவது கிளற வேண்டும்.
பிறகு தேங்காய் பால் கால் டம்ளர் மற்றும் வெள்ளம் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சத்தான ஜவ்வரிசி பீட்ரூட் பாயாசம் ரெடி. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பொருட்களின் அளவை கூட சேர்த்து செய்து கொடுக்கலாம் . காலை உணவாக கொடுத்தால் உடல் எடை கூடும்.
இதில் நாம் தேங்காய் பால் சேர்த்து செய்துள்ளதால் கோடை காலங்களில் ஏற்படும் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
பீட்ரூட் ஜூஸ் குழந்தையின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும், ஜவ்வரிசி உடல் எடை யை அதிகரிக்கச் செய்யும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…