கவனம்..சர்க்கரை பிரியர்களா நீங்கள்..! அப்போ உங்களுக்குத்தான் இந்த பதிவு..!

Sugar

நாம் அனைவரும் 70-80 வயது வரை ஆரோக்கியமாக வாழவேண்டும் என விரும்புவது உண்டு. நமது ஆரோக்கியம் மற்றும் நாம் வயதாகும் விதம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் உணவுமுறை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, உணவை சரியான அளவு படி, எடுத்துக்கொண்டாலே போதும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Sugar
Sugar [Image Source- Getty Images]

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி என்கிற பழமொழி நம்மளுடைய உணவு முறையிலும் பொருந்தும். எனவே, எது எடுத்துக்கொண்டாலும் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் தினமும் உபயோகம் செய்யும் உணவு பொருட்களில் பல நமக்கு தீங்குகளை விளைவித்து வருகிறது.

Sugar
Sugar [Image Source- iStock]

அதில் மிக முக்கியமான ஒன்று நாம் விரும்பி உபயோகம் செய்யும் சர்க்கரை (Sugar) இதனை நமது வாழ்க்கையில் தினமும் காபி, பால், இனிப்பு வகைகளை செய்வதற்கு என அனைத்திற்கும் உபயோகம் செய்து வருகிறோம். ஆனால் அத்தகைய சர்க்கரையின் அதிகப்படியாக உட்கொள்வதால் ஏற்படும் தீங்குகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதனை அதிகமாக எடுத்துக்கொள்வதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படுகிறது. அதனை பற்றி பார்க்கலாம்…

1. உடல் பருமன்

சர்க்கரை கலோரிகளை மட்டுமே வழங்குகிறது. இதில் பயனுள்ள சத்துக்கள் எதுவும் இல்லை. கூடுதலாக, சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இது அதிக இனிப்புகளுக்கான பசியை மேலும் அதிகரிக்கிறது. இதனை அதிகமாக உபயோகித்தால் உடல் பருமன் பிரச்சனை ஏற்படும். எனவே, உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

2. இதய ஆரோக்கியம் பாதிப்பு 

ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிகப்படியான சர்க்கரை உணவுகளை உட்கொள்வது இதய நோய்கள் ஏற்படுத்துவதற்கான அபாயத்தை உண்டாக்கிறது. சர்க்கரை பானங்களை உட்கொள்வது இரத்த அழுத்தத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் அதிகப்படியான சர்க்கரை கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இருதய அமைப்பு மோசமான ஆரோக்கியமாக மாறுகிறது.

3. இன்சுலின் எதிர்ப்பு

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை உயிரணுக்களுக்கு கொண்டு செல்வதை எளிதாக்குவது.

குறுகிய கால இன்சுலின் எதிர்ப்பை மாற்றியமைக்க முடியும் என்றாலும், நாள்பட்ட ஹைப்பர் இன்சுலினீமியா நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதிக அளவு சர்க்கரையை உபயோகம் செய்யாதீர்கள்.

4. மூளை ஆரோக்கியம்

நமது மூளை அதன் செயல்பாட்டிற்காக நமது குளுக்கோஸின் பாதியை பயன்படுத்துகிறது. போதுமான அளவு சர்க்கரையின் அளவு நியூரான்கள் மற்றும் நரம்பு செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளில் முறிவுக்கு வழிவகுக்கும்.  இந்த தேவையை பூர்த்தி செய்ய போதுமான கார்போஹைட்ரேட்டுகள் தேவை, இருப்பினும் அதிகப்படியான சர்க்கரை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை உட்கொள்வது மூளையின் அறிவாற்றலை பாதிக்கிறது. அது மட்டுமின்றி நியாபகம் மறதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

5. தோல் ஆரோக்கியம்

நமது சருமம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதைப் பொறுத்தது. எனவே, சர்க்கரையை அதிக அளவு உட்கொள்ளல் கொலாஜனின் குறுக்கு இணைப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் தோல் மிகவும் கடினமாகிறது. அதிகப்படியான சர்க்கரை உபயோகம் செய்வதால்  முகப்பரு, தோல் சுருக்கம், குறிப்பாக கன்னம் மற்றும் கழுத்தைச் சுற்றி தொங்குதல் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்