Dark circle [Imagesource : representative]
இன்று பெரும்பாலானோர் சரும அழகை கருவளையம் கெடுக்கிறது. கருவளையம் என்பது கண்களின் கீழ் காணப்படும் கருப்பு நிறத் தோல் பகுதியாகும். இந்த பிரச்னை தூக்கமின்மை, அதிகப்படியான வேலைப்பளு, ஹார்மோன் மாற்றங்கள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால் ஏற்படுகிறது.
கருவளையம் (Dark circles) ஏற்படக் காரணம்
கருவளையம் இரவு முழுவதும் தூங்காவிட்டால், கண்களின் கீழ் உள்ள தோல் தளர்வடைந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. அதிகப்படியான வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை கண்களின் கீழ் உள்ள தோலில் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
கர்ப்பம், மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாகவும் கருவளையம் ஏற்படக்கூடும். சில மருந்துகள் பயன்படுத்துவதாலும் கருவளையம் ஏற்படுகிறது. கருவளையம் ஏற்படுவதற்கான காரணத்தைப் பொறுத்து, அதை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.
இதையும் படியுங்கள் : இனிமே கருப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க..! இந்த இரண்டு பொருள் போதும்..! சூப்பர் டிப்ஸ் இதோ ..!
கருவளையத்தைக் குறைக்க சில டிப்ஸ்
கருவளையம் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பிரச்னையில் இருந்து விடுபட, கண்களுக்கு தேவையான தூக்கத்தை கொடுங்கள். மன அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உங்களது மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். சத்தான உணவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகமாக்குகள். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை தவிர்த்து விடுங்கள்.
மேலும் , அதிகமாக மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். கருவளையம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை தான். இதனை சரி செய்ய மேற்கண்ட சில வழிமுறைகளை கடைபிடித்து வந்தாலே சரியாகிவிடும்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…