பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனைக்கான காரணங்களும் தீர்வுகளும்.. இதோ..!

PCOS (1)

சென்னை –கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது என்றும், அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி மருத்துவ ஆய்வுகள் என்ன கூறுகிறது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தற்போதைய நவீன உலகம் தொழில்நுட்பங்களில் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதை அளவிற்கு நோய்களிலும் வளர்ந்து விட்டது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய் ,உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டிகள் ,தைராய்டு பிரச்சனைகள் போன்றவை பலரையும் வாட்டி வதைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு  பிரச்சனைகள் இல்லை என்று பல ஆய்வு கட்டுரைகளில் கூறப்படுகிறது.

நீர்க்கட்டி என்றால் என்ன ?

[polycystic ovary syndrome-PCOS]கருப்பையில் சினைமுட்டைகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்து மாதவிடாய் நாட்களில் வெளியேறும் ,இதுவே PCOS அல்லது  PCOD இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் சினைப்பையிலே  தங்கி சிறு சிறு நீர்கட்டிகளாக உருவாகிறது .இதுவே நீர்கட்டியாகும் .

நீர்க்கட்டி எதனால் வருகிறது?

பி சி ஓ எஸ் மற்றும் பிசிஓடி என்று சொல்லக்கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் வருவதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுவது மாவுச்சத்து உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது, குறைந்த உடல் உழைப்பு ,அதிகமான துரித உணவுகள் உட்கொள்வது ,பிராய்லர் சிக்கன் அதிகம் எடுத்துக் கொள்வது, மன அழுத்தம் ,பதட்டம் ,மாதவிடாய் வலிகளுக்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ,மாதவிடாயை தள்ளி போட மாத்திரை எடுத்து கொள்வது போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.

குண்டாக இருப்பதால்தான் நீர்க்கட்டி பிரச்சினைகள் வருகிறது என பல பெண்களும் நினைக்கிறார்கள் இது முற்றிலும் தவறு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்  ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீர்க்கட்டி பிரச்சனைகள் வரும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்திக்கிறார்கள் .

நீர்கட்டியின்  அறிகுறிகள்;

நீர் கட்டியால் பாதிக்கப்பட்டால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி 45 நாட்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருப்பது  அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருவது  அல்லது 20 நாட்களில் மாதவிடாய் ஏற்படுவது போன்றவை  முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது.

உடல் மாற்றங்கள்;

கழுத்தில் கருமை, அதிகப்படியான முகப்பரு, மீசை மற்றும் தாடி வளர்ச்சி , அதிகப்படியான முடி உதிர்தல், திடீர் எடை அதிகரிப்பு மற்றும் திடீரென உடல் மெலிந்து காணப்படும் .

பின் விளைவுகள்;

ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் முடிந்து 14 நாட்கள் முதல் 18 நாட்களுக்குள் கருமுட்டை வெளிப்படுகிறது, இது இயற்கையானது, ஆனால் நீங்கள் PCOS மற்றும் PCOD பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால்  இன்சுலின்  உற்பத்தியில் பிரச்சனைகள் இருக்கும். இன்சுலின் தான் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்திற்கு  சரியான அளவு சுரக்க வேண்டும் .

ஆனால் நீர்க்கட்டி இருந்தால் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆன்ட்ரோஜன் அளவு அதிகமாக சுரக்கும். இதனால்  மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுகிறது .இதுவே கருத்தரிப்பதில் தாமதம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது  .அதுமட்டுமல்லாமல் 40 வயதுக்கு மேல் சர்க்கரை வியாதி ,இருதய கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் .

தீர்வுகள்;

இதற்கு உணவியல்  மாற்றமும், வாழ்வியல் மாற்றமும் தான் தீர்வாக இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாவுச்சத்து உள்ள உணவுப் பொருள்களை குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் .மேலும் உணவு இடைவேளைகளுக்கு நடுவில் சிட்ரஸ் பழ  வகைகளான திராட்சை, அண்ணாச்சி பழம் ,எலுமிச்சை போன்றவற்றை ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் .இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

மேலும் முழு தானியங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தினமும் கடைபிடிக்க வேண்டும் .குறிப்பாக சைக்கிளிங் மற்றும் யோகாவில் பட்டர்பிளே  என்று சொல்லக்கூடிய யோகாவை தினமும் செய்து வர வேண்டும் .அது மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதி மற்றும் கால் பகுதிக்கு தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் நீர்க்கட்டி பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.

மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுவது என்ன?

நீர்கட்டிகளுக்கு என நிரந்தர தீர்வாக எந்த மருந்து மாத்திரைகளும்  இல்லை மேலும் சிகிச்சை மூலமாக நீர்க்கட்டிகளை அகற்றினால் அது மீண்டும் எட்டு மாதங்களுக்கு பிறகு வர வாய்ப்புள்ளது. நீர் கட்டியை கட்டுப்படுத்த முடியுமே தவிர அதை முற்றிலும் தவிர்க்க முடியாது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

ஆகவே நாம் உணவு பழக்க வழக்கத்திலும், அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும்  இந்த நீர்க்கட்டி பிரச்சனையிலிருந்து வெளியேறி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services