துலீப் ட்ராபியில் இடம் பெறாத ரோஹித்-விராட்! மறுப்பு தெரிவித்து பேசிய சுனில் கவாஸ்கர்!

Virat - Sunil Gavaskar - Rohit

மும்பை : துலீப் டிராபி தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலியை அணியில் எடுக்காததால் அதனை மறுத்து சசுனில் கவாஸ்கர் பேசி இருக்கிறார்.

வங்கதேச அணியுடன் வரும் செப்டம்பர் மாத இறுதியில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் உட்பட 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும், சுனில் கவாஸ்கரும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் மிட்-டே பக்கத்தில் எழுதி இருந்தார்.

இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் மற்றும் விராட் கோலியின் பெயர்கள் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. அந்த அணி அறிவித்த போதே பிசிசிஐ, ‘இந்த துலீப் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடுபவர் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு தேர்வாவார்கள்’ என அறிவித்திருந்தனர்.

அதன்படி, வீரர்களும் தற்போது அந்த தொடருக்காக தங்களைத் தயார்ப் படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ரோஹித்-கோலியை துலீப் ட்ராபியில் விளையாடுவார்கள் எனத் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான தொடருக்கு முக்கியத்துவம் தந்து இருவருக்கும் ஓய்வு அளித்துள்ளோம் என பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா தெரிவித்தார்.

இது பற்றி சுனில் கவாஸ்கர் கூறுகையில், “துலீப் டிராபி தொடருக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைத் தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை, எனவே அவர்கள் அதிக பயிற்சி இல்லாமல் வங்காளதேச டெஸ்ட் தொடருக்குச் செல்வார்கள். இதனால் இந்திய அணி தான் கஷ்டப்பட போகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஒருவரைச் சார்ந்து அவரது மென்மையான முதுகில் இது போன்ற தொடரை கவனமுடன் கையாளப்பட வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் பேட்ஸ்மேன்களும் களத்தில் கொஞ்சம் பேட்டிங் செய்வது நன்றாக அமையும். அதற்கு காரணம் எந்த விளையாட்டிலும் வீரர்கள் 35 வயதை கடந்து விட்டால் தொடர்ச்சியாக விளையாடுவது தங்களது தரத்தை உயர்தரமாக வைத்துக் கொள்வதாகக் கருதப்படும். ஆனால் ஒரு நீண்ட இடைவெளி கிடைத்தால் தசைகள் பலவீனமடையும். அதனால் பழைய ஃபார்மிற்கு திரும்புவது கடினமாகி விடும்”, என சுனில் காவஸ்கர் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin-Ajith kumar
Ajithkumar Mystery Death
sivaganga lockup death
Madurai Branch of the High Court
mk stalin speech
elon musk vs donald trump