கொள்ளு உண்பதால் கிடைக்கும் கணக்கில்லா நன்மைகளை அறியலாம் வாருங்கள்!

குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு மட்டும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது. இந்த கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்.
கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள்
கொள்ளுவில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் அனைத்தும் கரைவதுடன் சிறிதளவு கொள்ளை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வரும்பொழுது உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த கொள்ளுவில் தேங்கியுள்ள கொழுப்புகளை அகற்ற கூடிய தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதுடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் நார் சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிடலாம்.
மேலும் இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்தலாம். மேலும் இதிலுள்ள பொட்டாஷியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காரணமாக சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் மூலப் பிரச்சினை உள்ளவர்கள் சிறிதளவு கொள்ளை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் பொழுது மூல நோய் விரைவில் குணமடையும். மேலும் அதிக அளவு உடலில் தேவையான புரதச்சத்து நிறைந்து இருப்பதற்கு இந்த கொள்ளு உதவுகிறது. இதனால் தசைகளின் வலிமையை அதிகரிக்கும். இதிலுள்ள கால்சியம் காரணமாக எலும்புகள் மற்றும் எலும்பு மண்டலம் முழுவதும் வலிமை பெறும். மேலும் விந்தணுக்களை அதிகரிக்க விரும்பக்கூடிய ஆண்களும் தினமும் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே விந்தணு குறைபாடுகள் இருக்காது ஆரோக்கியமாக வாழலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025