தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளின் போனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்!

Fake lover sends mother's private videos to children after relationship breakdown between fake lovers in Gujarat.

குஜராத்தில் கள்ள காதலர்களுக்கு இடையேயான உறவு முறிவால் தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தனது கணவரை பிரிந்து 15 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரியக்கூடிய இவர் நாளடைவில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஆகியுள்ளார். தனிமையில் இருந்த அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததால் இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் தவறான உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பெண் அவருடனான உறவில் முறிவு ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அந்தப் பெண்ணின் குழந்தைகளின் போனிற்கு இவருடன் தனிமையில் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் தாயிடம் இது குறித்து கேட்டு சண்டை இடவே அந்த பெண்மணி அந்த நபரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்பொழுது சமூக வலைதளத்திலும் தான் வெளியிடப் போவதாக அவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.