கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்!

Default Image

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்.

கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம்.

கால்சியம்

கால்சியம் நிறைந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் குழந்தையின் வளர்ச்சி சீராகவும், குழந்தையின் எலும்புகள் வலுவாகும் காணப்படும்.. எனவே கர்ப்பிணிப் பெண்கள் இந்த காலகட்டத்தில் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. இது தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுத்து,  மேம்படுத்துகிறது.

நார்சத்து

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு வாழைப்பழத்தை ஒருநாளைக்கு எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைப்பதோடு, உடலில் நார்சத்தின் அளவு அதிகரித்து உடலின் இயக்கமும் சீராக செயல்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்