உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் சாப்பிட வேண்டியஉணவுகளை தெரிஞ்சுக்கோங்க ..!

Exercise-உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியை நாடி செல்கின்றனர் .ஆனால் உடற்பயிற்சியில் இருக்கும் ஆர்வம் எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை .உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறை தான் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது .
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்;
உடலில் எனர்ஜி இல்லாமல் உடற்பயிற்சி கட்டாயம் செய்யக்கூடாது. சாப்பிடும் உணவுகளில் ரத்த சக்கரை அளவு அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் எனர்ஜி அதிகமாக இருக்கும். ஆப்பிள் ,பேரிக்காய், பீனட் தடவியப் பட்டர் ,ஏதேனும் தானிய ரொட்டி, ஓட்ஸ், கிரீன் டீ, நட்ஸ் போன்றவற்றை உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கால் மணி நேரத்திற்கு முன்பு கட்டாயம் தண்ணீர் சிறிதளவு குடித்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்;
உடற்பயிற்சியின் போது அதிக எனர்ஜி பயன்படுத்தப்பட்டிருக்கும், பயிற்சிக்கு பிறகு பலரும் புரோட்டின் பவுடர் ,பாட்டில்களில் கிடைக்கும் எலக்ட்ரோ லைட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வதை விட அதற்கு பதில் இளநீர் ,தண்ணீர் ,வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். இவற்றை உடற்பயிற்சி செய்த 20 நிமிடங்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் உடற்பயிற்சி செய்த முடித்த பிறகு தசைகள் சத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் அப்போது எடுத்துக்கொள்ளும் உணவு உங்கள் உடலை வலிமையாக்கும். பயிற்சியின் போது உடலில் உள்ள அமினோ அமிலங்கள் குறைந்திருக்கும். அதனால் அமினோ அமிலங்கள் நிறைந்த அவித்த முட்டை, தயிர், மோர் ,பால் போன்ற உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
55 லிருந்து 60% கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், கோதுமை, ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள், பாஸ்தா போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். 15 இல் இருந்து 20% கொழுப்புச் சத்து மிக்க மீன் , நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளவும்.
மேலும் 20 சதவீதம் புரதச்சத்து அதிகம் நிறைந்த மீன் , சிக்கன், பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்த உடனே சர்க்கரைப் பொருட்கள் ஆன கேக், ஜூஸ் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என கூற படுகிறது . உடற்பயிற்சி செய்வதற்கு முன் கட்டாயம் வாம் அப் பயிற்சியை செய்ய வேண்டும்.
நாளுக்கு நாள் பயிற்சியின் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்திலேயே அதிக நேரம் பயிற்சி செய்வதையும் ,அதிக எடை கொண்ட பொருள்களை தூக்குவதையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஜிம் செல்பவர்களாக இருந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பயிற்சியளிப்பவரிடம் சொல்ல வேண்டும்.
பிறகு அவர் உங்களுக்கு தகுந்த உடற்பயிற்சியை கற்றுக் கொடுப்பார். ஆகவே உங்கள் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளையும் முறையான உணவு முறைகளையும் பின்பற்றினால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025