கங்குவா 2-வில் அவரும் இருக்காரு! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் மிகவும் நீளமான ஒரு கதையம்சம் கொண்ட படம் என்பதால் படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், கோவை சரளா, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், படத்தின் இரண்டாவது பாகம் குறித்த சீக்ரெட் ஒன்று கசிந்து சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், கங்குவா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் கார்த்தியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது தான்.
முதல் பாகத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் தான் நடித்து வருகிறார். இரண்டாவது பாகத்தில் அவருடன் இரண்டாவது பாகத்தில் கார்த்தியும் சேர்ந்து சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளாராம். இந்த தகவலை பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பேட்டியில் அவரிடம் தொகுப்பாளர் கங்குவா படத்தின் இறுதிக்காட்சியில் கார்த்திக் கேமியோ கதாபாத்திரத்தில் வருகிறாரா? இரண்டாவது பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? எனவும் கேட்டார். இந்த கேள்விக்கு பாகில் சொன்ன விவேகா ” இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இயக்குனர் என்னை என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கு ஆமாம் என்று பதில் வைத்து கொள்ளுங்கள்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ஒரு சிலர் சூப்பர் என்று சொன்னாலும் சஸ்பென்ஸை இப்படி உடைத்துவிட்டீர்களே என கூறியுள்ளார்.
மேலும் இந்த தகவல் புறம் இருக்க கங்குவா படத்தின் இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கங்குவா 2 படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025