இன்று கருணாநிதி என்னும் சூரியன் உதித்த நாள்!

Default Image

கலைஞர் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. அதன் பின் இவரது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார். முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக பிறந்த இவர், திருக்குவளை என்ற குக்கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன்-3ம் நாள் பிறந்தார்.

இவர் சிறுவயதில் இருந்தே, தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.

இவர் தூக்குமேடை என்ற நாடகத்தில் நடித்ததற்கு, எம்.ஆர்.ராதா, இவருக்கு கலைஞர் என்ற பட்டம் அளித்தார். இவர் அளித்த பட்டத்தை வைத்தே இன்று வரை அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய 14-வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இவர் அரசியலில் ஈடுபட்டார். இவர் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.

இவர் உடல்நலக்குறைவால், 2018, ஆகஸ்ட், 7-ம் நாள், சென்னை மருத்துவமனையில் காலமானார். இன்று இவரது 96-வது பிறந்தநாள், இவரது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts