Kuruma gravy [Image source : Awesome Cuisine]
இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
ஒரு மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்க்கவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்க்கவும். ஒரு லிட்டர் வீதம் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் ஆறு விசில் வரும் வரை அப்படியே விடவும்.
இப்போது குக்கரை திறந்தால் வீடு மட்டும் இல்லை, தெருவே மணக்கும் குருமா ரெடி. இந்தக் குருமாவை இட்லி, தோசை சப்பாத்தி, இடியாப்பம், ஊத்தப்பம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் தேங்காய் சேர்த்துள்ளதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்கவும் .
இந்த மாதிரி காய் இல்லாத நேரங்களில் அல்லது காய் விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்தக் குருமாவை செய்து அசத்துங்கள். அதுமட்டும் இல்லாமல் தினமும் சட்னி மற்றும் சாம்பார் வகைகளை செய்வதற்கு பதில் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…