இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தற்போது போட்டோ சூட் நடைபெற்றுவருகிறது. அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் […]
அஜித்-சிவா கூட்டணியில் நான்காவதாக உருவாகவுள்ள திரைப்படம் விசுவாசம். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான விவேகம் திரைப்படம் மக்களிடம் வரவேற்ப்பை பெற வில்லை. ஆகவே இப்படத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என இயக்குனர் அவருக்கு எப்போதும் வரும் படு லோக்கலான கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் தன் எப்போதும் நடிக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் இளமை தோற்றத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படம் தன விசுவாசம். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று படக்குழு ட்விட்டரில் அறிவித்தனர். தற்போது நிலவும் செய்தியில் யுவன் படத்திலிருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
மலையாளத்தில் நல்ல நடிகர் என்ற பெயரையும், தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஓகேஓகே படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து சந்தானத்தை வைத்து பிழைத்து கொண்டிருந்தவர் மனிதன் படம் மூலம் தன்னை நடிகனாக நிலை நிறுத்திகொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் ஆகிய மகேஷிண்ட பிரதிகாரம் என்ற […]
லைகா நிறுவனம் 2.O படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகும் .இந்த நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் ராஜு மகாலிங்கம் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.இதன் காரணமாக அவர் தனது லைக்கா நிறுவனத்தில் கிளை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் . இந்தியாவிலும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக ராஜூ மகாலிங்கம் செயல்பட்டு வந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் 2.0 படத்தை […]
தீபாவளி தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படம் சுமார் 255 கோடி வசூல் செய்திருந்தது. இப்படத்தின் 100 வது நாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகிய நிலையில் தொலைகாட்சியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இது 100வது நாளை கொண்டாட இருந்த விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. source : www.dinasuvadu.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை வசூல் வேட்டை நடத்திவருகிறது. முதல் வாரத்திலேயே ரூ 38 கோடி வசூல் செய்திருந்தன. இப்படம் இன்று வரை தமிழகத்தில் மட்டுமே ரூ.44 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.60 கோடி வசூலை தாண்டி இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இப்படம் இன்னும் தெலுங்கில் டப் செய்யப்படவில்லை. அது எப்படி வசூல் செய்ய […]
பில்லா 2, சூது கவ்வும், பீட்சா 2 போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது ஆக்சிஜென் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கடத்தல் கும்பலை துரத்தி செல்வது போன்ற காட்சி கடலில் நடந்து வருகிறது. காட்சியின் பின்பு அனைவரும் படகில் ஏறி சென்றனர். அனால் அவரை மட்டும் காணவில்லை. படபிடடிப்பு இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடலால் அடித்து செல்லப்பட்டார். பின்பு மீட்பு குழு சென்று தேட அவர் உயிர் பிழைத்ததாக […]
போலீஸ் படங்கள் இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு பழனி, காரைக்கால் மற்றும் நெல்லையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருநெல்வேலியில் இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். ஃபிப்ரவரி மாதம் இறுதியில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தை காவல் நிலையம் போல செட் ஆக்கி படம் பிடித்திருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது […]
நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் […]
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார். தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. […]
பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம். வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார். ஆனால் சில மாதங்களில் அதன் […]
மன்னர் வகையறா படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய இயக்குனர் பூபதி பாண்டியன், தனக்கும், விமலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதுபற்றி கூறினார். இதுபற்றி பூபதி பாண்டியன் கூறியது: என் டைரக்ஷனில் நடித்த தனுஷ், விஷால் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாகி விட்டார்கள். விமலும் தயாரிப்பாளராகியிருக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது நிறைய நடிகர்களுக்கு சரியாக வேட்டி கட்டவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு பாடல் காட்சியின்போது எனக்கும் விமலுக்கும் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2 நாட்கள் பேசாமல் இருந்தோம். […]
அஜித் ரசிகர்கள் எப்பொழுதும் அவரது பெயரை வைத்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்வது வழக்கம் . இதுவரை பலருக்கு பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கும் நல்ல நாளில் உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். அதைப்போலவே அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளுக்காக சிவகாசியில் ஆதரவற்றோருக்கு பல நல்ல காரியங்களை செய்து வந்தனர் . அவர்களுக்கு வேண்டியதை குடுத்து மிகவும் உதவினர். இதனால் அங்கு உள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர் என்பது கூறவேண்டியது.
நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் வேலைக்காரன். இப்படம் சிவா நடிப்பில் வெளியாகி அவரது படங்களிலேயே பெரிய வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் இப்படத்தை பற்றி நடந்த சம்பவங்களை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘சினிமாவில் ரெட் கார்டு கலாச்சாரம் பற்றி தெரியவில்லை. ஒரு படத்தின் படபிடிப்பை நிறுத்துவதால் எப்படி பிரச்சனை சரியாகும் என தெரியவில்லை. வேலைக்காரன் படபிடிப்பு முதல் நாளன்று நிறுத்தப்பட்டது. அன்று இரவு சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் கட்டபஞ்சாயத்து […]
ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி […]
ஜாதி, மதம் என்று பார்க்காமல் காதலில் விழுந்திருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலிக்கிறார். சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்துவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ருதி பட்டு சேலை உடுத்தியும், ைமக்கேல் பட்டு சட்டை, பட்டு வேட்டி உடுத்தியும் பங்கேற்றனர். பின்னர் இருவரும் லண்டன் பறந்தனர்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மைக்கேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ஸ்ருதி. அப்போது […]
தல அஜித்குமார் தன் தொழில் நடிப்பது மட்டுமே என்று கூறி தன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார். ஆனாலும் அவரது படங்களுக்கு கட்டவுட் வைப்பதும் பாலாபிசேகம் செய்வதும், அவரது பிறந்த நாளான்று நலத்திட்டங்களை செய்வதும் என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பலரின் பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு நல்ல உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர். […]
பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வலைதளங்களில் பிரகாஷ் ராஜை விமர்சித்து கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: “முதலில் நான் ஓர் இந்தியன். தகுதி வாய்ந்த நபராக இருந்தால், நாட்டின் எந்த ஒரு மாநிலத்திற்கும் தலைவராகலாம் […]
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து […]