பாடத்தில் சந்தேகம் கேட்டதற்காக – 4 ஆசிரியர்கள் அவமானப்படுத்தினர் மாணவன் எழுதிய கடிதம் சிக்கியது. வேலூரில், 11-ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்குக் காரணமாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.வேலூரை அடுத்த பொய்கையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த, அதே பகுதியைச் சேர்ந்த அருண் பிரஷாத் என்கிற மாணவன், கடந்த 3-ம் தேதி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த நிலையில், நேற்று மாலை […]
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையான மாற்று இடமும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகைட்டதை அடுத்து, வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த வட்டாட்சியரை சூழ்ந்துகொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில், மாற்று […]
வேலூர் அருகே பேர்ணாம்பட்டில் அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்ட சுப்பிரமணி, ஆகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
வேலூரில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வேலூர் அருகே குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காதலிக்க மறுத்த மாணவி ஜானகியை பிரசாந்த் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மாணவி ஜானகி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் ஷூ கம்பெனி வேனில் பயணம் செய்த 16க்கும் மேற்பட்டோர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ப்ரவீன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
வேலூர் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார். வேலூர் அருகே ஆம்பூர் அருகே வடசேரியில் விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார். கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்னை திரும்பியபோது காயமடைந்தவரை கண்டதும் முதல்வர் உதவி செய்தார். விபத்தில் காயமடைந்த 2 பேரையும் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினார் முதலமைச்சர் பழனிசாமி.
வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், வணியம்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது அப்பகுதி மக்களின் புகார். கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி ஆகியவை பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆற்காடு பகுதியில் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் 3 குழந்தைகளை விஷம் கொடுத்து ஜெயக்குமார் என்பவர் கொலை முயற்சி செய்துள்ளார் . இவருக்கு உள்ள அஸ்வினி, கொடைசெல்வி, காவியா என்ற 3 குழந்தைகளை கொல்ல முயற்சி செய்துள்ளார். நிலத்தகராறு காரணமாக ஜெயக்குமார் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிகமாக உயர்த்தி சில பைசாமட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாலையில் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். source : www.dinasuvadu.com
தனியார் பேருந்துகள் பல நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகள் பயப்படும் அளவிற்கு தறிகெட்டு வேகமாக செல்கின்றன. அதனால் பல நேரங்களில் விபத்துக்குள்ளகின்றன. அப்படி அடிக்கடி நடக்கிறது. ஆப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பந்தாரபள்ளியில் தனியார் பேருந்து தனது கட்டுபாட்டை இழந்து ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். உடனே காயமடைந்த அந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலிசாருக்கு […]
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் புதியதாக அமைக்கும் பணிகளை துரைமுருகன் துவங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு பயன்படுத்தாத தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முழுவதும் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக திறமையின்மையே காரணம் என்றும், இப்படியே சென்றால் அரசு போக்குவரத்துகழகமே இல்லாத நிலை உருவாகும் எனவும் […]
வேலூர்: சிப்காட் பகுதியில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமா என்பவரை போலீசார் இன்று ஜாமினில் விடுவித்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் சுமார் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த தெருவிளக்குகளை அணைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். சுப்பிரமணி எனபவரது வீட்டில் 25 சவரண் தங்க நகைகள், ரூபாய் 30 ஆயிரம் பணமும், கார்த்திகேயன் என்பவரது வீட்டில் 3 சவரன் நகை மற்றும் ரூபாய் 8 ஆயிரமும் கொள்ளைடிக்கப்பட்டன. இதே […]
வேலூர் ;மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தில் செல்போன் வாங்கியதற்கு பணம் கொடுக்காத பிரச்னையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், வகுப்பு தோழனையே அடித்து கொலை செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள். இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர், ஜாக்டோ– ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகரன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்க, நடுநிலை பள்ளி பட்டதாரி […]
வேலூர்: சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சிக்கியது.பின்பு பறிமுதல் செய்த அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசியை கடத்திவந்தது யார் என்பது குறித்தும் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.