டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,137 பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 53,116 ஆக உயர்ந்துள்ளது. அதில் 27,512 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்தார்.
மேலும், அங்கு ஒரே நாளில் 1828 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,567 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2035 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 13,074 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மொத்தமாக அம்மாநிலத்தில் 3,34,376 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…