கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் இருந்தும் வரும் சூழலில் இன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓணம் பண்டிகையையொட்டி அரசின் நிவாரண கிட் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் ரூ.100 அதிகரிக்கப்படும் என்றும் 100 நாட்களுக்குள் 153 புதிய குடும்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணிப்பொறி லேப்டாப் வழங்கும் வித்யா ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும். புதிய நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…