ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 1 வாரமாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு விடுத்து இருந்தது. உடனடியாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீர் பகுதிகளில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 4 நாட்களாக ஜம்மு பகுதிகளில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பகுதியில் இன்று வெள்ளி சிறப்பு தொழுகை முடிந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு வசதியாக சில சலுகைகள் தளர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், மாநிலம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…