Bhihar CM Nitish Kumar [Image source : PTI]
2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு என்று பாட்னா கூட்டத்துக்கு பிறகு நிதிஷ் குமார் பேட்டி.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, பாட்னாவில் இன்று எதிரிக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்வர்மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட 15கக்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பிறகு கூட்டாக செந்தியாளர் சந்திப்பில் பேசி வருகின்றனர். அப்போது பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்றைய கூட்டம் நல்லதொரு கூட்டமாக அமைந்தது. கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாஜகவை வீழ்த்த முதல் கூட்டத்தில் வியூகம் வகுத்துள்ளோம்.
எதிர்கட்சிகளை ஒன்றாக இணைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். 17 கட்சிகள் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், அடுத்த கூட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்று நடத்த உள்ளது எனவும் கூறினார். இதுபோன்று, 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம் என எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
அதேபோல் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த இலக்கு என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுபோன்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பலரும் ஒருமித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் எனவும் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…