நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தில் நேற்று மாலை ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மகன் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் தனது அறையில் இருந்தபோது ஆசிரியர் மற்றும் அவரது கணவர் தங்கள் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் டியூஷன் வகுப்புகளை எடுத்து கொண்டு பிஸியாக இருந்துள்ளனர்.
அப்போது தங்களின் மகனின் திடீர் அலறல் சத்தம் கேட்டு, அவரது அறைக்கு ஆசிரியர் மற்றும் அவரது கணவர் வந்த போது தங்களின் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக குர்தா மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பள்ளி சீருடை மற்றும் பிற பொருட்களை கொண்டு பிளஸ் டூ மாணவனை நாங்கள் கண்டுபிடித்தோம். விசாரணையின் போது தனது குற்றத்தை பிளஸ் டூ மாணவர் ஒப்புக்கொண்டார். நாங்கள் பள்ளி பை, உடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளோம். விசாரணையில், பிளஸ் டூ மாணவர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயிடம் டியூசன் சென்று படித்து வந்துள்ளார்.
டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக பொது இடங்களில் வைத்து உயிரிழந்த சிறுவனின் தாய் அதாவது ஆசிரியை அவமானப்படுத்தி உள்ளார். அதனால் கோபத்தில் இருந்த பிளஸ் டூ மாணவர் ஆசிரியரின் மகனை கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும், சிறுவனின் தந்தை மனோஜ் பல்தாசிங், நிலுவையில் உள்ள டியூசன் கட்டணத்தை செலுத்துமாறு பிளஸ் டூ மாணவனை ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார்.
ஆனால் சிறுவனின் பெற்றோர்கள் பிளஸ் டூ மாணவன் பணத்துக்காக எங்களது மகனை கொலை செய்து இருக்கலாம். அவருக்குப் பின்னால் வேறு யாராவது இருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிய சிபிஐ மூலம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…