அமித் ஷா பெயரை கூறி மோசடி.. 25 வயது இளைஞர் கைது.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளர் என கூறி மோசடி செய்த 25 வயது இளைஞரை நேற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நபர் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தெஹ் முண்டாவாரில் வசிக்கும் சந்தீப் சவுத்ரி என தெரியவந்துள்ளது.
இவர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர் அமைச்சர்களை தொடர்பு கொண்டு சிலருக்கு வேலை வழங்குமாறு கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் சந்தீப் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
சந்தீப் சவுத்ரி ஹீரோ நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வேலையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025